வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
காரியாபட்டி,
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
நரிக்குடி
நரிக்குடி அருகே வீரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 60). இவர் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தல் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து விட்டு பின்னர் வீரக்குடி செல்வதற்காக ராக்கப்பன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கரியனேந்தல் விலக்கு அருகே சாலையை கடக்கும்போது மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற லாரி, ராக்கப்பன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
சாத்தூர் தாலுகா நள்ளியை சேர்ந்தவர் முத்தையா (52). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக உப்பத்தூர் விலக்கு அருகே உள்ள ஓட்டலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவர் செல்லும் போது உப்பத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே பஞ்சர் ஆகி நின்றிருந்த சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.