வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயசு 56). இவரது மனைவி நாகஜோதி(47). இருவரும் முறம்பு பஸ் நிலையத்தில் இருந்து சாலையைக் கடக்கும் போது மினி லோடு வேன் மோதியதில் மாரியப்பன் படுகாயம் அடைந்து இறந்தார். இது குறித்து தளவாய்புரம் போலீசார், கடையநல்லூரைச் சேர்ந்த வேன் டிரைவர் யோவான் (வயது 37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சக்கராஜா கோட்டை தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் குமார்(36). இவர் இருசக்கர வாகனத்தில் சத்திரப்பட்டியில் இருந்து ஆலங்குளம் வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுரேஷ்குமார் இறந்தார். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 27) என்பவரை கைது செய்தனர்.