முதியவர் உள்பட 2 பேர் பலி


முதியவர் உள்பட 2 பேர் பலி
x

சோளிங்கர் அருகே வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலியாயினர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அருகே வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலியாயினர்.

சோளிங்கரை அடுத்த தானியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). இவர் நீலகண்ட ராயப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது வாலாஜாவில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த வேன் பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

அதே போன்று ஸ்ரீ விலாசபுரம் கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சீனிவாசன் (50) என்பவர் சோளிங்கரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சாலைக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

இந்த இரண்டு விபத்துகள் குறித்தும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story