கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது


கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

கோவில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை சங்காயிபட்டி அருகே உள்ள ராம்நகர் பகுதியில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று காலை 2 பேர் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி கொண்டி இருந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் அந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குப்பாச்சிப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து சுரேஷ் என்பவர் தோகைமலை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பிரபாகரன், 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story