குழந்தை உள்பட 2 பேர் பலி
வேன்-ஆட்டோ மோதிய விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரிதாபத்ைத ஏற்படுத்தியது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜபாளையம்,
வேன்-ஆட்டோ மோதிய விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரிதாபத்ைத ஏற்படுத்தியது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
ராஜபாளையம் அருகே உள்ள மேல வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் வனிதா. இவருடைய குழந்தை ராகுல் (வயது 2).
இவர்களுடைய உறவினர் புத்தூரை சேர்ந்த தங்கமாடத்தி. இவருடைய குழந்தை சொர்ண தர்ஷன் (1½). இவர்கள் அனைவரும் ராஜபாளையம் சென்று விட்டு பின்னர் தளவாய்புரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் வீட்டுக்கு திரும்ப சென்று கொண்டு இருந்தனர்.
ஆட்டோவை புத்தூரை சேர்ந்த தங்கபிரகாஷ் (31) ஓட்டினார். இவர்கள் புனல்வேலி கண்மாய் பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆட்டோவும், ஒரு வேனும் ேமாதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
2 ேபர் பலி
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த வனிதா உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக டிரைவர் தங்கப்பிரகாசை மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை சொர்ணதர்ஷன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.