கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்


கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
x

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம் ஆகினர்.

கரூர்

தோகைமலை அருகே புழுதேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அபிநயா (வயது 19). இவர் மணப்பாறை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வருவதாக தனது பெற்றோருரிடம் தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அபிநயா வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அபிநயாவை அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து, மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதிைய சேர்ந்தவர் பாக்கியம் (62). இவர் வீட்டில் இருந்து கரூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் தொட்டியத்திற்கு செல்லவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாக்கியத்தின் மகன் ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து மாயமான பாக்கியம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story