மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம்
சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை
வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அடுக்கம்பாறையிலிருந்து வினோத்குமார் மோட்டார்சைக்கிளில் அரக்கோணத்திற்கு சென்றார். சோளிங்கர் அடுத்த பத்மாபுரம் அருகே சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, வினோத்குமார் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்து போலீஸ்காரர் வினோத்குமார், லட்சுமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வினோத்குமார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story