வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு
x

வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை


வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

லாரி மோதியது

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்ற ராஜன் (வயது 35). தனியார் நிதிநிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அலுவலகத்திற்கு வழக்கம்போல மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூடல்நகர் மேம்பாலத்தில் வந்தபோது, ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (60). இவர் நேற்று, திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து, மதுரை டவுன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story