வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மற்ெறாரு சம்பவத்தில் போட்டோ கிராபர்இறந்தார்.
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மற்ெறாரு சம்பவத்தில் போட்டோ கிராபர்இறந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
உப்பிலியபுரம் ஜீவன்நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 51). டிராக்டர் டீலரான இவர் சர்க்கரை நோயால் அவதி அடைந்து வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்த செல்வகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
திருச்சி உறையூர் சோழராஜபுரம் களத்துமேட்டு பகுதியில் மண்எண்ணெய் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்குள் 35 வயது வாலிபர் ஒருவர் கேபிள் வயரால் அங்கிருந்த கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெள்ளை பச்சை கோடு போட்ட அரைக்கை சட்டையும், சிவப்பு நிற வேட்டியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இடது மார்பில் எம்.தேவி மற்றும் திரிசூலம் படம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து உறையூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்து சாவு
திருச்சி உறையூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (56). போட்டோ கிராபரான இவர் நேற்று முன்தினம் சன்னாசி பட்டியில் உள்ள ஒரு புதிய வீடு கிரகப்பிரவேசத்திற்கு போட்டோ எடுக்க சென்றார். இந்த நிலையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்த ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.