குச்சியால் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயம்
குச்சியால் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 48), விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் மனைவி அல்லி (42) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ரவி தனக்கு சொந்தமான இடத்தில் தைலமரக்குச்சிகளை கொட்டி வைத்து இருந்தார். இதைப்பார்த்த அல்லி என்னுடைய இடத்தில் ஏன் குச்சிகளை கொட்டி வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் குச்சியால் அடித்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அல்லி மற்றும் ரவி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.