வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட2 பேர் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட2 பேர் இறந்தனர்.
என்ஜினீயர்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கணேஷ் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கிஷோர் குமார் (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினையில் கிஷோர் குமார் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கிஷோர் குமார் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி பலி
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நேற்று காலை 11 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.