வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருநெல்வேலி

நெல்லை குன்னத்தூர் தெற்கு விளாகம் மேற்கு தெருவை சேர்ந்தவர் தளவாய் (வயது 78). இவர் நேற்று முன்தினம் விளாகம் ரோடு மஞ்சங்குழி வாய்க்கால் பாலத்தில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது எதிரே வந்த மற்றொரு மொபட், தளவாய் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தளவாய் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார்.

அதேபோல் பாளையங்கோட்டை தொம்மை மைக்கேல்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ராஜாசிங் (34) என்பவர் தெற்கு புறவழிச்சாலை குறிச்சி வாய்க்கால் பாலம் சந்திப்பு பகுதியில் கடந்த 13-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் ராஜாசிங் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இச்சம்பவங்கள் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story