வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் சாவு
x

வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் உள்பட 2 பேர் இறந்தனர்.

திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே உள்ள எம்.புத்தூர் ஊராட்சியை சேர்ந்த சுருட்டாபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 65). விவசாயியான இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனைத்து ஆடுகளையும் விற்று செலவு செய்து விட்டார். இதனால் வேறு பிழைப்புக்கு வழியில்லாமல் அவதி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் முசிறி தெற்கு அயிட்டாம்பட்டியை சேர்ந்த கனகராஜ். எலக்ட்ரீசியன். குடும்ப பிரச்சினையால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார். இந்தநிலையில் மதுபோதையில் அவர் பாலகட்டையில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story