பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்


பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்
x

பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.

கரூர்

கரூர்,

கரூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் தேஜாஸ்ரீ (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வருதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் தேஜாஸ்ரீயை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேஜாஸ்ரீ தாத்தா திருநாவுக்கரசு கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கொடியரசின் மகள் பாரதி கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story