அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் காயம்
அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் காயம்
கீழையூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
பஸ் கவிழ்ந்தது
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா ஓடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (வயது 48). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை அன்பரசு ஓட்டினார். இந்த பஸ்சில் திருத்துைறப்பூண்டி தாலுகா ஆண்டாங்கரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (41) என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். பின்னர் அந்த பஸ் நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றபோது, கீழையூர் சீராவட்டம் பாலம் அருகே திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
2 பேர் காயம்
இதில் டிரைவர் அன்பரசு, பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் ஆகியோர் காயமடைந்தனர். 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.