விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x

விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ்(வயது 34). இவர் அரியலூரில் உள்ள பேக் கடையில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே குழுவில் எடுத்த கடனை கட்டுவதற்காக சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காகஅரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம்(58). விவசாயியான இவர் மகன்களின் படிப்புகளுக்காக நகையை அடகு வைத்துள்ளார். மேலும் அந்த பணத்தில் அவர் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செங்கமலம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சை்ககாக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story