மது-சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


மது-சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x

மயிலாடுதுறையில் மது-சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகு இரவு நேரத்தில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்ற குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கன்னியம்மன்கோவில் தெருவை சேர்ந்த மகாதேவன் (வயது50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 83 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் அங்கு பதுக்கி வைத்திருந்த 55 லிட்டர் அளவிலான சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதேபோல நீடூர் கணபதி ஆற்றங்கரை தெருவில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி மயில்ம்மாள் (45) என்பவரையும் மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் 55 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story