பெண் உள்பட 2 பேர் தற்கொலை


பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்னட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்னட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலி தொழிலாளி

திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 42). கூலி தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுப்பையா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவரது மனைவி லதா (50). சம்பவத்தன்று இவர் திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள மகன் கோபிநாத் வீட்டிற்கு வந்தார்.

நேற்றுமதியம் கோபிநாத் தாய்க்கு சாப்பாடு வாங்குவதற்காக ஓட்டலுக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது லதா தூக்கில் பிணமாக தொங்கினார். சற்றுமனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story