பெண் உள்பட 2 பேர் தற்கொலை
பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விஷம் தின்றார்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அபிவிருத்தீஸ்வரர் பகுதியை சேர்ந்தவர் ஷகிருதீன்(வயது 73). இவரது மகள் ஜாக்கின் பர்வீன்(39). இவர் தனது கணவரை பிரிந்து, மகனுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தன்னுடைய சகோதரியின் வீட்டில் வந்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு வந்தவர், அங்கு எலிமருந்தை(விஷம்) தின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
இதேபோல் திருச்சி வரகனேரி பெரியார்நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 39). இவர் நோய் பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்து இருந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து வலியால் அவதி அடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.