சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில், ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பாலத்துறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அரியலூர் மாவட்டம் ஒருவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கண்ணன் மட்டும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால், விபத்தை ஏற்படுத்திய ராஜா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.