ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது ஏமப்பேர்-தென்கீரனூர் செல்லும் சாலையின் மேம்பாலத்தின் கீழே ஏமப்பேர் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் சிவக்குமார் (வயது 28), தென்கீரனூரை சேர்ந்த தங்கவேல் மகன் அரவிந்தன் (24) ஆகியோர் தடியுடன் அங்கு ஒருவருக்கொருவரை திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதைபார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story