சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கு சிறை
x

வேனில் கடத்தி சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் தாலுகா புளியமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). மில் தொழிலாளி. அவருடைய நண்பர், சாணார்பட்டியை அடுத்த ஒத்தக்கடையை சேர்ந்த தேவநாதன் (24). வேன் டிரைவர். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி பிரகாஷ், அவருடைய நண்பருடன் சேர்ந்து வேனில் 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக சிறுமி தரப்பில் சாணார்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பிரகாஷ், தேவநாதன் ஆகியோர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story