2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:45 AM IST (Updated: 7 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ெகாலை, பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 63). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மகன் கணேசனை கொலை செய்த வழக்கில் பட்டிவீரன்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதேபோல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோசப் ஜெயசீலன் (44) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் மாவட்ட சிறையில் இருந்த பழனிச்சாமி, ஜோசப்ஜெயசீலன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story