ஆன்லைன் மோசடியில் 2 பேர் இழந்த பணம் மீட்பு


ஆன்லைன் மோசடியில் 2 பேர் இழந்த பணம் மீட்பு
x

நெல்லையில் ஆன்லைன் மோசடியில் 2 பேர் இழந்த பணம் மீட்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 63). இவர் இணையதளத்தில் வந்த காய்கறி விற்பனை செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு, காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். அதேபோல் நெல்லை மாவட்டம், மல்லக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுகுமார் என்பவர் இணையதளத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடவடிக்கை எடுத்து அவர்களின் பணத்தை மீட்டனர். அந்த பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.


Next Story