இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து சாவு


இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து சாவு
x

விருதுநகரில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

விருதுநகர்

விருதுநகரில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தனர்

விருதுநகர் ஆனைகுழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28), எலக்ட்ரீசியன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50), பெயிண்டர்.

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் தடுப்பு சுவரை தாண்டி மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் 2 பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் சாவு

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story