கடையை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது


கடையை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
x

சிவகாசியில் கடையை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி எஸ்.என்.புரத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் டீ கடை நடத்தி வருபவர் பார்த்தசாரதி. இவர் தனது டீக்கடையின் வியா பாரத்தை முடித்துக்கொண்டு சம்பவத்தன்று பூட்டி விட்டு சென்றார். இரவு 2 மணிக்கு டீ கடையின் கதவு உடைக்கப்படுவதாக அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பார்த்தசாரதிக்கு தகவல் கொடுத்துள்ளார். டீக்கடைக்கு வந்து பார்த்த போது ரிசர்வ்லைன் காந்தி நகரை சேர்ந்த கணேஷ்குமார் (வயது 42), மனோஜ்குமார் (30) ஆகியோர் டீக்கடையின் கதவை உடைத்து அங்கு இருந்த பணப்பெட்டியில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story