வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய 2 பேர் கைது
மாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செப்பிலாந்தோப்பு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயராணி (வயது 40). இந்நிலையில் ஜெயராணி நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று இருந்தார். பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி கொடி மற்றும் கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயராணி மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்.
2 வாலிபர்கள் கைது
மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் ஜெயராணியின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்றது அதே பகுதியை சேர்ந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சண்முகம் மகன் ஜீவானந்தம் (20), ராமசாமி மகன் நந்தகுமார் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 2 பேரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியவர்கள்
விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் ஆவூர், ஆக.11-
மாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.ஆவூர் பிரிவு ரோடு அருகே வசிப்பவர் இந்திராணி (வயது 60). இவர், 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் இந்திராணி நேற்று காலை எழுந்து ஆடுகளை பார்த்தபோது அங்கு கட்டியிருந்த 2 ஆடுகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த இந்திராணி இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது ஆடுகளை திருடிச் சென்றது மாத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சண்முகம் மகன் ஜீவானந்தம், ராமசாமி மகன் நந்தகுமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.