பணம் பறித்த 2 பேர் கைது


பணம் பறித்த 2 பேர் கைது
x

பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 18). சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து வரும் போது சின்ன பேராலியை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து லோகேசை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.470 மற்றும் செல்போனை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று விருதுநகர் தாழையப்பன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (21). இவரது தாயார் மாரியம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் நிலையில் இந்நகர் லட்சுமி நகரில் ஒரு வீட்டிற்கு சென்று பூ வாங்கி வரும் படி தாயார் கூறியதையடுத்து சக்திவேல் லட்சுமி நகருக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் சின்ன பேராலியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற தெக்கு (28), வினோத் குருநாதன் என்ற வினோத் (23) ஆகிய 2 பேரும் ேசர்ந்து சக்திவேலை வழிமறித்து அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 400 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி, வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story