நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது


நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
x

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். இதில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரெத்தினகுமார்(வயது 29), விளாகம் கிராமத்தை சேர்ந்த பாப்புராஜ்(29) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வேட்டையாட பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரையும் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story