மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற அணைத்தலையூர் காலனி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சிவந்திபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒரு பெண் நின்றுக்கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் கருங்குளம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி சுந்தரம் (58) என்பதும், மது விற்றுக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.