மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலவிடுதி பஸ் நிறுத்தம் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ரவி என்பவர் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டனர்.

இதேபோல் லாலாபேட்டை போலீசார் பிள்ளபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ரைஸ்மில் அருகே மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் வைத்து மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story