மது விற்ற 2 பேர் கைது
கொட்டாம்பட்டி பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். கொட்டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனை டாஸ்மாக் அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த சாணிபட்டியை சேர்ந்த கருப்பையாவை (வயது 65) கைது செய்து அவரிடமிருந்து 11 மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கொட்டாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் அருகே கூடுதல் விலைக்கு மது விற்ற அய்வத்தான்பட்டியை சேர்ந்த இளையராஜாவை (44) கைது செய்து அவரிடமிருந்து 52 மதுபானபாட்டில்கள், ரூ.1,250-ஐ பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story