மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

தென்தாமரைகுளம் அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்தாமரைகுளம் போலீசார் காலையில் ஆண்டிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாங்கரை இடையன்கோட்டையை சேர்ந்த சுனில்குமார் (வயது 44) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 19 மது பாட்டில்கள், ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து செய்தனர்.

இதேபோல் பொற்றையடி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக ராமபுரம், தண்டநாயக்கன் கோணத்தை சேர்ந்த ஜெஸ்டின் (42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 23 மது பாட்டில்கள், ரூ.1600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

------


Next Story