சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு, ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசம்பட்டு குளம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதே போல் ஊராங்காணி கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி(41) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story