புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர், செந்துறை பகுதிகளில் உள்ள பள்ளிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் பொன்பரப்பி மற்றும் சிறுகளத்தூர் கிராமங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நந்தகுமார்(வயது 35), செல்வம்(39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story