புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி ஜீவாநகர் பகுதியில் பாண்டியன் மளிகை கடையிலும், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர், அந்த 2 கடைகளில் இருந்தும் மொத்தம் 96 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் அந்த கடையின் உரிமையாளர்கள் பாண்டியன் (வயது 47), சீனிவாசன் (40) ஆகியோரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story