நாட்டு துப்பாக்கி கடத்தி வந்த 2 பேர் கைது
நாட்டு துப்பாக்கி கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
நாட்டு துப்பாக்கி கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊசி நாட்டான் வட்டம் கூட்ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், நாட்டு துப்பாக்கி எடுத்து வந்தது கண்டுபுடிக்கப்பட்டது.
விசாரணையில் மோட்டார்சைகக்கிளில் வந்தவர்கள் ஜோலார்பேட்டையை அடுத்த கிழவன் வட்டம் பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் சென்றாயன் (வயது 27) என்பவர் அரசு அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி எடுத்து வந்ததும், சொரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் ராம்கி (30) மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவர்களை கைது செய்தனர்.