வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது


வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது
x

வெளிமாநில மதுபானபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

வெளிமாநில மதுபானபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூருவில் இருந்து கர்நாடக மாநில மதுபாட்டில்களை சிலர் கடத்தி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் நேற்று காலை பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அத்தியந்தல் பகுதியில் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் கட்டப்பையை தூக்கிக் கொண்டு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பேர் நடந்து சென்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கர்நாடக மாநில மதுபானங்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணை நடத்தியதில், அவர்கள் அய்யம்பாளையத்தை சேர்ந்த காளியப்பன் (வயது 56), மல்லிகா (60) என்பதும், பெங்களூரில் இருந்து விற்பனைக்காக மதுபானங்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 650 மதுபான பாட்டில்கள் (அட்டை பெட்டியில் உள்ள மதுபானம்) பறிமுதல் செயத போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Next Story