கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பாக்குவட்டி அருகே உள்ள மதுக்கடை அருகில் பட்டாகத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேர் திரிவதாக பேரையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சின்ன ஆனையூரை சேர்ந்த டேவிட் என்ற முனியசாமி (வயது 28), மருதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் பாலா (22) ஆகிய 2 பேரும் கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் பட்டாகத்தி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story