கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர்


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர்
x

நெல்லையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

ஸ்ரீவில்லிபுத்தூர் மீனாட்சி தோட்ட தெருவை சேர்ந்தவர் விநாயக செல்வம் (வயது 20). இவர் நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வள்ளியூர் செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனா். இதுகுறித்து விநாயக செல்வம் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த செய்யது அலி (20), தாழையூத்து பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லத்துரை (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story