இரட்டைக் கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர்
குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முட்டம் இரட்ைடக் கொைல வழக்கில் 2 ேபர் சிக்கினர். கஞ்சா கும்பலால் கொல்லப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்,
குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முட்டம் இரட்ைடக் கொைல வழக்கில் 2 ேபர் சிக்கினர். கஞ்சா கும்பலால் கொல்லப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் பவுலின் மேரி (வயது 48). இவரது தாயார் திரேசம்மாள் (90). இவர்கள் 2 ேபரும் கடந்த 6-ந் தேதி இரவு வீட்டுக்குள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மறுநாள் வெகுநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் இரட்டைக்கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொலையாளிகளை கைது செய்ய மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் ேபரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
துருவி, துருவி விசாரணை
குளச்சல் துைண போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் நேரடி மேற்பார்வையில் ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் ேபாலீசார் தீவிர ேதடுதல் ேவட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்த கொலையில் வடமாநில தொழிலாளர்கள், கஞ்சா கும்பலை சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் சல்லடை போட்டு போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.
இதற்கிடையே கஞ்சா கும்பல்கள் பற்றி ஏற்கனவே முட்டம் ஊர் மக்கள் சார்பாக வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் இரட்டைக்கொலை நடந்த பகுதியில் ஒரு மங்கிகுல்லாவும், ஒரு அயன்பாக்சும் கண்டெடுக்கப்பட்டது. அவை கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் துைண சூப்பிரண்டு தங்கராமன் கொலையாளிகளை பற்றி ரகசிய தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் தருவதாக அறிவித்திருந்தார். இந்த பரபரப்புக்கு இடையே கஞ்சா கும்பலை சேர்ந்த 4 பேர் திடீரென காணவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. பின்னர் அந்த 4 பேரையும் அவர்கள் செல்போன் எண் மூலம் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர்.
வழக்கு தொடர்பாக 2 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் கஞ்சா கும்பலைச் ேசர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. விசாரணை முடிவில் குற்றவாளிகள் யார்? என்பது தெரியவரும் என ேபாலீசார் ெதரிவித்தனர். ெகாைல ெசய்யப்பட்ட பவுலின்ேமரி தனது வீட்டின் மாடியில் ைதயல் பயிற்சி நிைலயம் நடத்தி வந்துள்ளார். அந்த பயிற்சி நிலையத்துக்கு வரும் ெபண்களை அந்த பகுதியில் உள்ள கஞ்சா கும்பலை ேசர்ந்தவர்கள் ேகலி-கிண்டல் ெசய்ததாகவும், அதனால் அவர்கள் மீது பவுலின்ேமரி ெவள்ளிச்சந்ைத ேபாலீசில் புகார் ெசய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால் கஞ்சா கும்பலைச் ேசர்ந்தவர்கள் பவுலின்ேமரிையயும், அவரது தாயாைரயும் ெகாைல ெசய்திருக்கலாேமா? என்ற சந்ேதகத்தின் ேபரில் பிடிபட்ட 2 ேபரிடமும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.