கம்மாபுரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
கம்மாபுரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கலியை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் முகாசப்பரூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மனைவி லீமாதேவி (வயது 38). சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஊ.மங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமையல் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.
வலைவீச்சு
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் லீமாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனா். இதில் திடுக்கிட்ட அவர் திருடன்... திருடன்.. என சத்தம் போட்டாா். அதற்குள் அந்த மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.