போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோட்டூர் அருகே போலீஸ் ஏட்டை தாக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரியும் சூர்யா(வயது47) என்பவரை கடந்த 13-ந்தேதி பாலையூர் அருகே ஒரு மர்மகும்பல் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த சூர்யாவை மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலையூரை சேர்ந்த ஜீவானந்தம் (33), அவரது தம்பி அசோக்குமார் (31) ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார். அவர்களை குண்டர் சட்டத்தில் ைகது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் 2 பேரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.