கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

ஆற்காட்டில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதி சேர்ந்த சதீஷ் (வயது 29), ஆற்காடு வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (27) ஆகிய 2 பேைர போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் பிரபு ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில் சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.


Next Story