பெண்களிடம் நகையை பறித்த 2 பேர் கைது
பெண்களிடம் நகையை பறித்த 2 பேர் கைது
தாராபுரம்
தாராபுரம் அருகே 2 பெண்களிடம் நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
தாராபுரம் அருகே அரசு பணியாளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 52). இவர் கடந்த (ஆகஸ்டு) மாதம் 2-ந் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். அதேபோன்று உடுமலை சாலையில் வசித்து வரும் சந்திரசேகர் மனைவி ஜெயசுதா (45). கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்களில் வந்த 2 ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி ஜெயசுதா அணிந்திருந்த 5, பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளைதேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் போலீசார் நேற்று ஏரகம்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் அணைக்கரைபட்டியை சேர்ந்த ராம்ராஜ் மகன் ஒண்டிவீரன் என்ற கார்த்திக், வயது (30) மடத்துக்குளம் கே.டி.எம். பகுதியை சேர்ந்த அப்பாதுரை மகன் ஜெகதீஷ் (27) என்றும், அவர்கள் இருவரும் ஈஸ்வரி மற்றும் ஜெயசுதா ஆகியோரிடம் நகையை பறித்து சென்றதாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 பவுன்நகையை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பல குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்த போது நண்பராக பழகியுள்ளனர். அதன் பிறகு நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இருவரும் ஒன்றிணைந்து கூட்டு சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
---------------------