நண்பர்கள் 2 பேர் அவினாசி கோர்ட்டில் சரண்


திருப்பூரில் வாலிபரை கொன்ற வழக்கில் நண்பர்கள் 2 பேர் அவினாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் வாலிபரை கொன்ற வழக்கில் நண்பர்கள் 2 பேர் அவினாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து போலீ்்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் கொலை

திருப்பூர் எஸ்.ஏ.பி.சந்திப்பு ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாண்டி(வயது30). சம்பவத்தன்று இவரும், இவருடைய நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த நரசிம்ம பிரபு(25), கணேஷ் (30) மற்றும் சுள்ளான் பிரபு (25) ஆகியோர் அங்கேரிபாளையம் பிரிவு சுடுகாட்டிற்கு மது குடிக்க சென்றனர். அங்கு 4 பேரும் அமர்ந்து மது குடித்தனர். அப்போது மது போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கை கலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து சரத் பாண்டியை குத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சரத்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சரத்பாண்டி இறந்தார்

கோர்ட்டில் சரண்

இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரசிம்ம பிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான் பிரபு ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த நரசிம்மபிரபு மற்றும் கணேஷ் ஆகிய 2 பேரும் அவினாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுள்ளான் பிரபுவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.


Next Story