தெள்ளாரில் நர்சிடம் நகை பறித்து தப்பிய 2 பேர் கைது


தெள்ளாரில் நர்சிடம் நகை பறித்து தப்பிய 2 பேர் கைது
x

தெள்ளாரில் நர்சிடம் நகை பறித்து தப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

தெள்ளாரில் நர்சிடம் நகை பறித்து தப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக தாமரை செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் தாமரைச்செல்வியின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர்.

இது குறித்து தெள்ளார் போலீஸ் நிலையத்தில் தாமரைச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் தெள்ளார் போலீசார் கைது செய்து அவர்கள் பறித்த 7 பவுன் நகையை மீட்டனர்.


Next Story