பெண் உள்பட 2 பேர் கைது


பெண் உள்பட 2 பேர் கைது
x

பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இதில் பாலியல் தொழில் நடைபெறுவதாக புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த சென்டரில் பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது35) மற்றும் மேலாளரான தர்மபுரியை சேர்ந்த சுதா (37) ஆகிய 2 பேரையும் டவுன் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4 இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த மசாஜ் சென்டர் இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு உரிய உரிமம் இல்லாமல் இருப்பதாகவும், உரிமத்தை புதுப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. போலீசார் பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தலின் படி நகராட்சி, வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து அந்த தங்கும் விடுதிக்கு நேற்று 'சீல்' வைத்தனர்.


Related Tags :
Next Story