2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை


2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை
x

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை என நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி நாமக்கல் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த பன்னீர் (வயது35), ரஞ்சித்குமார் (28) என 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன், 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story