விபத்தில் இறந்த 2 பேர் அடையாளம் தெரிந்தது
தெற்கு வள்ளியூரில் விபத்தில் இறந்த 2 பேர் அடையாளம் தெரிந்தது
திருநெல்வேலி
பணகுடி:
தெற்கு வள்ளியூர் நாற்கரசாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக மீன்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் வள்ளியூர் அருகே கலந்தபனையைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபாண்டி (வயது 50), அவருடைய நண்பரான பணகுடி பாம்பன்குளத்தைச் சேர்ந்த பால் வியாபாரி முருகன் (47) என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக லோடு ஆட்டோ டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் உன்னங்குளத்தைச் சேர்ந்த சுரேஷை (30) போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story